தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

விழுப்புரம்,

கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தனித்தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் தெரிந்துகொள்ளலாம். இத்தேர்வின் விடைத்தாள் நகல் பெறவும், விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள கட்டண தொகை-யுடன் சேர்த்து வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி வரை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் மற்றும் ஆன்-லைன் கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விடைத்தாள் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு 205 ரூபாய் மற்றும் ஆன்-லைன் கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com