திருப்பூரில் நீர்நிலையோரம் வசிப்பவர்களுக்கு 1,280 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

திருப்பூரில் நீர்நிலையோரம் வசிப்பவர்களுக்கு 1,280 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.
திருப்பூரில் நீர்நிலையோரம் வசிப்பவர்களுக்கு 1,280 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
Published on

வீரபாண்டி,

திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆறு, நல்லாறு, சங்கிலிப் பள்ளம், ஜம்மனை பள்ளம் ஆகிய ஆறுகள் மற்றும் ஓடைகள் கரையோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

அதன்படி பலவஞ்சிபாளையம் பகுதியில் ரூ.96.11 கோடியில் 1,280 அடுக்கு மாடிகள் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் 400 சதுர அடி பரப்பளவில், ஒரு படுக்கை அறை, சமையலறை, பால்கனி, ஹால், குளியல் அறை, கழிப்பறை, ஆகியவையுடன் கட்டப்பட்டு உள்ளது. இங்கு 40 பிளாக்கு, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மேல்நிலைத் தொட்டி, நல்ல சுத்தமான குடிநீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தரை தளத்திலும், மற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் கொடுக்கப்படுகின்றன. இதேபோல் நெரிப்பெரிச்சல், ஜெய் நகர் பகுதியில் ரூ.20 கோடியில் 256 வீடு கட்டும் பணியும், பாரதி நகரில் ரூ.22 கோடியில் 288 வீடுகள் கட்டும் பணியும், திருக்குமரன் நகர் பகுதியில் ரூ.50 கோடியில் 960 வீடுகள் என மொத்தம் 2,784 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com