இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணி

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலங்களிலும் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணி
Published on

மேற்கு மண்டலத்தின் மார்க்கெட்டிங் டிவிஷன் பிரிவில் 350 பேரும், தெற்கு மண்டலத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் 350 பேரும் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். இது தவிர வடக்கு மண்டலத்தில் நான்-எக்சிகியூட்டிவ் தரத்திலான பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்யவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெற்கு மண்டலத்தில் உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 149 இடங்களும், கர்நாடகா - 69, கேரளா - 46, தெலுங் கானா - 42, ஆந்திரா - 44 இடங்களும் உள்ளன.

அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 31-1-2018 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 10-ம் வகுப்பு (மெட்ரிக்) தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தெற்கு மண்டல பணிகளுக்கு 19-2-2018-ந் தேதிக்குள்ளும், மேற்கு மண்டல பணிகளுக்கு 20-2-2018-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

வடக்கு மண்டலத்தில் உள்ள நான் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகன லைசென்ஸ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு 20-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் நகல் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு சாதாரண தபால் முறையில் அனுப்பி வைக்க வேண்டும். நகல் சென்றடைய 4-3-2018-ந் தேதி கடைசி நாளாகும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com