‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்ற முடியுமா?

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்ற முடியுமா? என்பது குறித்து வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆலோசனை நடத்தினார்.
‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்ற முடியுமா?
Published on

நாகர்கோவில்,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது குறித்து, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் புருசோத்தமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன், நபார்டு வங்கி மேலாளர் மார்டின் பிரகாசம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகளில் பெற்ற குறுகியகால கடன்களை நீண்டகால கடன்களாக மாற்றுவது குறித்தும், குறைந்த வட்டியில் கூடுதலாக கடனுதவிகள் வழங்குதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்டத்திலுள்ள வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் சேதமடைந்த வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com