அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான கட்டுப்பாட்டு கருவிகள் வருகை

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான கட்டுப்பாட்டு கருவிகள் வருகை
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில்,

இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு 80 பெட்டிகளில் 800 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாட்டு கருவிகள் தாசில்தார் (தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம்) முத்துகிருஷ்ணன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு கருவிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டு, 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன், அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com