அரியலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்1,28,829-பெண் 1,30,530

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டார். இதில் 1,28,829, ஆண் வாக்காளர்களும், 1,30,530 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
அரியலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்1,28,829-பெண் 1,30,530
Published on

அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகள் மேற்கொண்டதை தொடர்ந்து அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரத்னா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2,51,127 ஆண் வாக்காளர்களும், 2,52,612 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,03,746 வாக்காளர்களும் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம்களில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் படிவம் 6-ல் வரப்பெற்ற 6,693 விண்ணப்பங்களில் 6,656 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்-7-ல் வரப்பெற்ற 82 விண்ணப்பங்களில் 61 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்- 8ஏ-ல் வரப்பெற்ற 515 விண்ணப்பங்களில் 476 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.

இதேபோல் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி படிவம்-6-ல் வரப்பெற்ற 6,308 விண்ணப்பங்களில் 6,153 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்-7-ல் வரப்பெற்ற 217 விண்ணப்பங்களில் 198 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்-8ஏ-ல் பெற்ற 105 விண்ணப்பங்களில் 71 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,28,386 ஆண் வாக்காளர்களும், 1,28,543 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,56,934 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,28,829 ஆண் வாக்காளர்களும், 1,30,530 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,59,073 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் அரியலூர் மாவட்டத்தில் 5,16,296 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, தாசில்தார்கள கண்ணன் (தேர்தல்), குமரய்யா (ஆண்டிமடம்), அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com