ராணுவவீரர் ஆட்சேர்ப்பு முகாம்

ராணுவத்தின் சென்னை மண்டல தலைமை அலுவலகம், ஆட்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ராணுவவீரர் ஆட்சேர்ப்பு முகாம்
Published on

வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சீபுரம் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்க முடியும். இதற்காக 18-1-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அப்படி விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் வருகிற பிப்ரவரி 3-2-2018-ந் தேதி முதல் 12-2-2018 வரை நடைபெறும் ஆட்சேர்க்கை முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் முகாம் நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன், நேரில் ஆஜராகலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதியில் முகாமில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com