

நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தையொட்டி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவைக் காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் நெல்லை, அரவைக்காக திருவள்ளூருக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது.
இதற்காக நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் இருந்து 72 லாரிகள் மூலமாக நீடாமங்கலம் ரெயில்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் நீடாமங்கலத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றது.