விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரையொட்டி விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட்டை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக 2-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் தொடங்குகிறது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.

இதையொட்டி, விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 6 மணியில் இருந்து 6-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அந்த நாட்களில் விதானசவுதாவை சுற்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com