

மொரப்பூர்:-
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகே செம்மையானூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 74). இவரையும், இவருடைய மனைவியையும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி வீட்டில் கட்டிப்போட்டு விட்டு ஒரு கும்பல் 25 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குறற்வாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் விஜயன் என்ற நீடூர் விஜயன் (வயது 40) என்பவர் மீது மயிலாடு துறை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவின் பேரில் விஜயன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.