ஒரு வாரம் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி குமாரசாமி அமெரிக்கா சென்றார் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

ஒரு வாரகால சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
ஒரு வாரம் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி குமாரசாமி அமெரிக்கா சென்றார் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி 2-வது கட்ட கிராம தரிசன திட்டத்தை கடந்த 26-ந் தேதி ராய்ச்சூர் மாவட்டத்தில் நடத்தினார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் மறுநாள் பீதர் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு பசவகல்யாண் தாலுகாவில் உள்ள உஜலம்பா கிராமத்தில் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அதே கிராமத்தில் தங்கிய குமாரசாமி, நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் பீதரில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பினார்.

இந்த நிலையில் ஒரு வாரகால சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று இரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் இரவு 7.15 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்.

அங்கு ஆதிசுஞ்சனகிரி மடத்தின் சார்பில் வருகிற 5, 6, 7-ந் தேதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அதன் பிறகு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.

மேலும் உடல் நலன் குறித்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com