கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி - சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற இருப்பதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி - சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தகவல்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஆண்டு 5 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் டெங்கு காய்ச்சலால் 85 பேரும், மலேரியா காய்ச்சலால் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து சுகாதாரத்துறை, நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை மூலம் மொத்தம் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி ஸ்ரீசஞ்சீவி தனியார் மருத்துவமனை, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை, எலவனாசூர்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 6 இடங்களில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தயார் நிலையில் உள்ளது. முற்கட்டமாக மருத்துவ களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா தடுப்பூசிபோட உள்ளது.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரத்தில் 40 பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com