கோவையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; ஐ.டி. நிறுவன ஊழியர் கைது

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கியதாக ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செயப்பட்டார்.
கோவையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
Published on

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 24) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

இளம்பெண்ணும், ரஞ்சித்தும் நண்பர்களாக பழகியுள்ளனர். ஆனால் ரஞ்சித் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக அவரிடம் கூறினார். அவரது காதலை அந்த இளம்பெண் ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அவரது நட்பையும் துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் சம்பவத்தன்று சரவணம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்று அந்த இளம்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ரஞ்சித், அந்த பெண்ணை தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com