சமூக நலத்துறை சார்பில் ரூ.144 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்

சமூக நலத்துறை சார்பில் ரூ.144 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை சார்பில் ரூ.144 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் 2011-18-ம் ஆண்டுகளில் சமூக நலத்துறை சார்பில் ரூ.144 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு ஏழை தாய்மார்களின் நலன் கருதி, சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் படித்த ஏழை பெண்களுக்கு உதவுகின்ற வகையில் 10-ம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் ரூ.50 ஆயிரம் வழங்குவதுடன் தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்கப்பட்டு வந்தது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு முதல் 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டார்.

படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் 23 ஆயிரத்து 996 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 95 ஆயிரத்து 840 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ.107 கோடியே 34 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2016-2018 ஆண்டுகளில் ஆயித்து 750 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 14 ஆயிரம் கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ.10 கோடியே 52 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 571 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 317 பயனாளிகளுக்கு ரூ.144 கோடியே 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com