தேனியில், ஓய்வு பெறும் நாளில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணி இடைநீக்கம்

தேனியில், ஓய்வு பெறும் நாளில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேனியில், ஓய்வு பெறும் நாளில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணி இடைநீக்கம்
Published on

தேனி,

தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றியவர் சாம்பசிவம். இவர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற இருந்தார். இவரோடு சேர்த்து மாவட்டத்தில் மேலும் சில அதிகாரிகளும் பணி ஓய்வு பெற இருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவில் பணி மூப்பு நிறைவு பெற்றதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

ஆனால், கனிமவளத்துறை உதவி இயக்குனர் சாம்பசிவத்துக்கு பணி மூப்பு நிறைவு பெற்றதற்கான உத்தரவு நேற்று முன்தினம் இரவு வரை வழங்கப்படாமல் இருந்தது. இதனால், இவர் ஓய்வு பெற முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் ஓய்வு பெறும் நாளில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவு சென்னை கனிமவளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சாம்பசிவத்துக்கு நேரடியாக வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சாம்பசிவத்தின் மீது விவசாயிகள் தரப்பிலும், சில அமைப்புகள் தரப்பிலும் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்கப்பட்ட ஒரு புகாரின் பேரில் லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணை நிலுவையில் இருப்பதாக கூறி அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com