

திண்டுக்கல்,
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதன்மூலம் 5 ஆரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், தினமும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரெயில் பயணிகள், பஸ்நிலையம் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது. அதன்படி பழைய குட்ஷெட் பகுதியில் ரெயில்வே அதிகாரிகளுக்கு அலுவலகங்கள், ரெயில்வே போலீஸ் நிலையம், உணவகம் போன்றவை கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், கட்டிடங் கள் எதையும் கட்டவில்லை. இதனால் சில பகுதிகள் முட்செடிகள் முளைத்து காடு போன்று காட்சி அளிக்கிறது.