அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார்

பெருங்கட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார்
Published on

செய்யாறு,

வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வியாண்டு இறுதியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ரூ.200 வீதமும், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.500 வீதம் ஒவ்வொரு மாணவியிடமும் கட்டாயமாக பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்தால் வசூலிக்கப்படும் பணத்திற்கு உரிய ரசீதும் வழங்கப்படாமல் இருப்பதால் அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் பணம் வசூலிப்பது பெற்றோர்கள் மத்தியில் சந்தேகம் எழுகிறது. இது தவிர பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளிடம் மாற்று சான்றிதழ் வழங்கும்போது ரூ.300 வரை பணம் வசூல் செய்வதால் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த விஷயத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com