மானிய விலையில் சூரியசக்தி மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் சூரியசக்தி மின்வேலி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.
மானிய விலையில் சூரியசக்தி மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
Published on

தூத்துக்குடி,

தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் சார்பில் 2020-21-ம் ஆண்டு வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் மின்வேலி அமைப்பதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதால் விலங்குகள், வேட்டைக்காரர்கள், உயர் மின்அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வருவாய் இழப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்.

இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு மின்வேலியை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை அமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 1,245 மீட்டர் மின்வேலி அமைக்க, அமைப்புத்தொகையில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு, அனைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு வழங்க உள்ளதால், இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகம், செல்போன் எண்- 63743 50057, அல்லது உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 27, எட்டயபுரம் ரோடு, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி செல்போன் எண்- 94420 49591 அலுவலகத்தையும், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஸ்டேட் வங்கி காலனி வடக்கு, தூத்துக்குடி, செல்போன் எண் - 94436 94245 அலுவலகத்தையும், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, முத்துமாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர், செல்போன் எண் - 94431 57710 அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com