மின்வாரிய அலுவலகங்களில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள்

காஞ்சீபுர மின்வாரிய அலுவலகங்களில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள், டியூப் லைட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
மின்வாரிய அலுவலகங்களில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, ரெயில் நிலைய சாலை, பிள்ளையார்பாளையம் போன்ற இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்கள் அனைத்திலும் மின் நுகர்வோர்களின் வசதிக்காகவும், மின்கட்டண செலவை குறைத்து, அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகளின் பயனை மக்கள் அறிந்து விழிப்புணர்வு அடையவும், மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள், டியூப் லைட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து மின்வாரிய ஊழியர் கூறியதாவது:-

எல்.இ.டி. பல்பு (9 வாட்ஸ்) ஒன்றின் விலை தனியார் கடையில் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது.

அதே பல்பை மானியத்தில் ரூ.70-க்கு விற்பனை செய்கிறோம்.

எல்.இ.டி. டியூப் லைட் ஒன்று ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தனியார் கடைகளில் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்கிறார்கள்.

இதேபோல் 50 வாட்ஸ் மின் விசிறி கடைகளில் ரூ.1650 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை நாங்கள் ரூ.1110-க்கு விற்பனை செய் கிறோம்.

மத்திய அரசின் அங்கீகாரத்துடன் மானிய விலையில் இந்த பொரு ட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com