சென்னையில் 47 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது.
சென்னையில் 47 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்
Published on

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 47 வயது மதிக்கத்தக்க ஒருவர், தேர்வை எழுதி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். சென்னை வடபழனியை சேர்ந்த மோகன் (வயது 47) என்பவர்தான் இந்த தேர்வை எழுதியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 12-ம் வகுப்பு படித்து முடித்த இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் நீட் தேர்வை எழுதி அசத்தி இருக்கிறார்.

நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை என்பதால், இந்த தேர்வை எழுதியதாக கூறும் அவர், தன்னுடைய மகள் மற்றும் தங்கை மகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கும்போது அதில் ஈர்க்கப்பட்டு தேர்வில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com