சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று துருக்கி செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வெளிநாட்டு பெண் ஒருவர் வந்தார்.
சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்
Published on

மும்பை,

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரது உடைமைகளில் சோதனை போட்டனர். இதில் அவர் கொண்டு வந்த பையில் அதிகளவில் அமெரிக்க டாலர்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர்களின் இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சம் என்பது தெரியவந்தது. அந்த டாலர்களுடன் சிக்கிய பெண் ஜப்பான் நாட்டை சேர்ந்த மேரின் கடைகி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com