ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 4 ஓட்டல்கள், பெட்டிக்கடை தீயில் எரிந்து நாசம்

ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 4 ஓட்டல்கள், பெட்டிக்கடை தீயில் எரிந்து நாசம்.
ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 4 ஓட்டல்கள், பெட்டிக்கடை தீயில் எரிந்து நாசம்
Published on

பென்னாகரம்,

ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 4 ஓட்டல்கள், ஒரு பெட்டிக்கடை தீயில் எரிந்து நாசமானது.

கடைகளில் தீ

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 13 கடைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு சீல் வைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இன்றி அனைத்து கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக 2 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.

இதனிடையே இரவு ஒரு ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த தீ அருகில் இருந்த 3 ஓட்டல்கள், ஒரு பெட்டிக்கடை ஆகியவற்றிலும் பிடித்து கொண்டது. தீ கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்ததும் ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 4 ஓட்டல்கள், ஒரு பெட்டிக்கடை எரிந்து நாசமானது.

போலீசார் விசாரணை

ஒகேனக்கல் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஓட்டல்கள், பெட்டிக்கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்ததும் இன்பசேகரன் எம்.எல்.ஏ. விரைந்து சென்று பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com