மாநகராட்சி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : 2 பேர் கைது

தானேயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : 2 பேர் கைது
Published on

தானே,

தானே ஓவ்லா பகுதியில் உள்ள ஒரு இடம் போலீஸ் நிலையம் மற்றும் தபால் அலுவலகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்களை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி காசர்வடவலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com