

அவரது மனைவி பெயரில் அந்த வீடு இருந்தது. ஜேப்பியார் இறந்த பிறகு அந்த வீடு தொடர்பாக பிரச்சினை வெடித்தது. அந்த வீட்டின் பெயரில் ரூ.5 கோடி கடன் வாங்கி உள்ளதாகவும், கடன் திருப்பிச்செலுத்தப்படாததால், வீடு தனக்கு சொந்தம் என்று பைனான்சியர் ஒருவர் சொந்தம் கொண்டாடினார். இதையடுத்து அந்த வீட்டை, கடன் வாங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜேப்பியாரின் மனைவி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில் இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜேப்பியாரின் மகள் ஷீலா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது. ஜேப்பியாரிடம் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.