மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

ராசிபுரம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி மசக்காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

அந்த பெண்ணுக்கு 13 வயதில் மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி அந்த பெண் கட்டிட வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியை செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இது குறித்து மாணவியின் தாயார் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com