11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
Published on

புதுச்சேரி,

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளில் வக்கீல் தொழிலுக்கு மிகவும் பாதகமான அம்சங்களை மாற்றம் செய்யவேண்டும், புதுவை வக்கீல்களுக்கான சேமநல நிதியை உயர்த்தி வழங்கவேண்டும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய உத்தரவிடும் அதிகாரத்தை மீண்டும் கீழமை நீதிமன்றங்களுக்கு வழங்கவேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், புதுவையில் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின்படி புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறொரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார்.

வக்கீல்களின் போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com