

பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச்சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.50-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும் விலை உயர்ந்து விற்பனை ஆனது. கோவில் பண்டிகை காலம் என்பதால், பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.