ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 9 பெண்கள் படுகாயம்

வெங்கல்குப்பம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் பெண் கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 9 பெண்கள் படுகாயம்
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சி வெங்கல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 9 பெண் கூலி தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலைக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை மகேஷ் (வயது24) என்பவர் ஓட்டி கொண்டு இருந்தார்.

வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் ஏரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெங்கல் குப்பம் கிராமத்தை சேர்ந்த நிதியா (28), சிவலட்சுமி (55), வேளாங்கண்ணி (46), தாட்சாயணி (40), சரோஜா (62), வள்ளியம்மாள் (60), பவானி (35), யசோதா (70), வள்ளியம்மாள் (61) ஆகிய 9 பெண் கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன், ஒன்றிய கவுன்சிலர் திருமலைசிவசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கூலித் தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com