பாந்திராவில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; குண்டும், குழியுமான சாலையால் விபத்து

பாந்திராவில் குண்டும், குழியுமான சாலையால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.
பாந்திராவில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; குண்டும், குழியுமான சாலையால் விபத்து
Published on

மும்பை,

மும்பை ஜூகு கல்லி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பஞ்சம்லால் நிர்மல். சம்பவத்தன்று காலை 2 பயணிகளுடன் இவர் ஆட்டோவில் சவாரிக்கு சென்று கொண்டிருந்தார். இதில் ஆட்டோ பாந்திரா கிழக்கு கேர்வாடியில் உள்ள சாலையில் வந்துகொண்டிருந்தது.

மழையின் காரணமாக அந்த சாலை குண்டும் குழியாக கிடந்தது. இந்தநிலையில், சேதம் அடைந்த அந்த சாலையின் பள்ளத்தில் ஏறி இறங்கிய போது ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஆட்டோவுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தார். பயணிகள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த வழியாகசென்றவர் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த கேர்வாடி போலீசார் ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதம் அடைந்த சாலையினால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com