கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கிராமங்களில் கேடயம் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு
Published on

பெரம்பலூர்,

திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கிராமங்களில் கேடயம் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமை தாங்கி தண்ணீர் பந்தல், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எளம்பலூர் ஆகிய கிராமங்களில் கேடயம் திட்டம் குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல் துறையின் கேடயம் திட்டத்தின் உதவி செல்போன் எண்களான 6383071800, 9384501999 ஆகியவற்றை அழைக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் கேடயம் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் போலீசார் வழங்கினர். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் போலீசார் ஏற்படுத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, ஏட்டு பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com