சமயபுரம் பகுதிகளில் ‘தீ' செயலி விளக்க விழிப்புணர்வு பிரசாரம்

அவசர காலத்தில் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள அவசியம் ஏற்படும் போதும், அருகில் உள்ள தீயணைப்பு நிலைய தொடர்பு எண் இல்லாத போதும், அருகிலுள்ள நிலையத்தை தொடர்பு கொள்ள வசதியாக தீயணைப்பு துறையின் சார்பாக ‘தீ' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமயபுரம் பகுதிகளில் ‘தீ' செயலி விளக்க விழிப்புணர்வு பிரசாரம்
Published on

ஸ்மார்ட் செல்போன் வைத்து இருப்பவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து லொகேஷன் செட்டிங்கை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அவசர காலத்தில் இந்த செயலியை ஓபன் செய்து அதில் வரும் உதவி என்ற பட்டனை தொடும்போது உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு சமயபுரம் தீயணைப்பு நிலையஅலுவலர் சக்திவேல்மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான சமயபுரம் மாரியம்மன்கோவில் கவுண்டர், புதிய பஸ் நிலைய நுழைவுவாயில், சமயபுரம் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இது குறித்து விளம்பர பதாகைகளை வைத்து உள்ளனர். இதுபோல் துவரங்குறிச்சி, வளநாடு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் பொதுமக்களிடையே தீ செயலி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com