பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தாம்பரத்தில் விழிப்புணர்வு பேரணி

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தாம்பரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தாம்பரத்தில் விழிப்புணர்வு பேரணி
Published on

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. தாம்பரத்தில் உள்ள இந்துமிஷன் ஆஸ்பத்திரி முதல், மெப்ஸ் சிக்னல் வரை இந்த பேரணி நடைபெற்றது.

பேரணியை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி தொடங்கி வைத்தார். மேலும் தனது மகள் டாக்டர் இதழ்யாவுடன் பேரணியில் பங்கேற்றார். பேரணியில் ஏராளமான டாக்டர்கள், பெண்கள் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது போலீஸ் கமிஷனர் ரவி கூறும்போது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே இல்லாத சூழல் உருவாக்கப்படும். எந்தவித குற்றங்களும் இல்லாமல் பெண்களையும், குழந்தைகளையும் தமிழக காவல்துறை பாதுகாக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகர போலீஸ் எடுத்து வருகிறது. ஆஸ்பத்திரியில் பெண் நோயாளிகளை ஆண் டாக்டர் பரிசோதனை செய்யும்போது பெண் செவிலியர் அல்லது பெண்ணின் உறவினர் உடன் இருக்கவும், உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கும்போது பெண் உதவியாளர் உடனிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com