

திருவள்ளூர்
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் அவர்களுடன் பேரணியாக சென்றார். அவருடன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், புற்றுநோய் நுண்கதிர் சிறப்பு மருத்துவர் கோபிகா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயராஜ், குழந்தை நல மருத்துவர் பிரபுசங்கர், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் அரசு அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.