பாபர் மசூதி இடிப்பு தினம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கபடுவதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
Published on

ஈரோடு,

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந் தேதியில் நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமும், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து செல்லும் இடமுமான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகிறார்கள்.

மேலும், ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களையும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதேபோல் ஓடும் ரெயில்களிலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com