பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சமூக நீதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சமூக நீதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சமூக நீதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி,

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மாணவர்களின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களுக்கு புதுவை அரசு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. புதுவை அரசு கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகே நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழகம், மனிதநேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com