பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

பெண் குழந்தைகளுக்குவங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
Published on

திருமங்கலம்,

திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர். முகாமில் தேர்வான 150 பேருக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்வழங்கினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் தனலெட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருமங்கலத்தில் மதுரை புறநகர்மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஒன்றியப்பகுதியில் ஆலம்பட்டி, செங்கப்படை, கட்ராம்பட்டி, குண்ணத்தூர் உள்பட 5 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, திருமங்கலம் நகர செயலாளர் விஜயன், இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, அம்மா பிறந்த பிப்ரவரி மாதத்தில் அன்னதான விழா தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் விளையாட்டு போட்டி, அன்னதானம், மருத்துவமுகாம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

பெண்குழந்தைகள் பயன்பெறும் பாரத பிரதமரால் ஏற்படுத்தப்பட்டுள்ள செல்வமகள் திட்டத்தில், முதல்-அமைச்சர் ஆணைக்கினங்க 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 250 ரூபாய் முதல்தவணை செலுத்தி ஜெயலலிதா பேரவை சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com