தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரூ.200 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
Published on

தர்மபுரி,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொது காப்பீட்டு நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 70 வங்கி கிளைகள் நேற்று ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரி ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிப்பு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மண்டல செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் கவுதம், ஜெய்சங்கர், முனிஆதித்தன், வீரன், கலீல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் 700 ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ரூ.200 கோடி மதிப்பிலான பணபரிவர்த்தனை, காசோலை மாற்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com