தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.700 கோடி வர்த்தகம் பாதிப்பு

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.700 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.700 கோடி வர்த்தகம் பாதிப்பு
Published on

தூத்துக்குடி,

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வராக்கடன்களை வசூல் செய்ய வேண்டும், பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும், விவசாயிகள், மாணவர்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும், புதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 274 வங்கி கிளைகளில் 214 வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதில் பணியாற்றி வரும் சுமார் 2 ஆயிரத்து 600 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். சில தனியார் வங்கிகள் மட்டும் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ.700 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய பேரவை சார்பில் பீச் ரோட்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தம் இன்றும் (சனிக் கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் 11, 12, 13-ந் தேதிகளில் மீண்டும் வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. அதிலும் தீர்வு காணப்படவில்லை எனில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் வங்கி ஊழியர்கள் முடிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com