வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

வங்கிகள் தாராள மாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டு கோள் விடுத்தார்.
வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில வங்கியாளர் கள் கூட்டம் அக்கார்டு ஓட்ட லில் நேற்று நடந்தது. கூட்டத் தில் கலந்து கொண்டு முதல் -அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவமாடி வரு கிறது. இதையொட்டி நாட் டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விவசாயம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு சுமார் ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங் களை அறிவித்துள்ளது. கொரோனா நிவாரணமாக புதுவையில் ஒவ்வொரு குடும் பத்துக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கினோம். அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்களுக்கும் தனித் தனியே நிதியுதவி வழங்கப் பட்டது.

இந்த உதவித்தொகைகள் வங்கிகள் மூலமாகவே பட்டு வாடா செய்யப்பட்டது. இதில் வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டன. சில நேரங் களில் வங்கியாளர்கள் கூடுதல் நேரம் பணியும் செய்தனர்.

புதுவை அரசை பொறுத்த வரை மக்களின் உயிர் முக் கியம். அதே நேரத்தில் மாநில பொருளாதாரமும் முக்கியம். இந்த நேரத்தில் வங்கிகளின் உதவி மிகவும் தேவையாக உள்ளது. அதாவது விவசாயி கள், தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் தேவையான அளவு கடன் வழங்கவேண்டும். மாநிலத்தை பொறுத்தவரை ரூ.3 ஆயிரத்து 200 கோடி கடன் தேவை உள்ளது.

இந்த கடன் தொகையை வேளாண்மை, தொழிற்சாலை கள், கால்நடை பராமரிப்புக் கும், மகளிர் சுய உதவிகுழுக் களுக்கும் தாராளமாக வழங்க வேண்டும். மாநிலத்தின் பால் தேவை ஒரு லட்சம் லிட்டராக உள்ளது. அதில் 55 ஆயிரம் லிட்டரை உள்நாட்டில் உற்பத்தி செய்கிறோம். 45 ஆயிரம் லிட்டர் வெளியில் கொள்முதல் செய்யப் படுகிறது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கும் ரூ.1.50 லட்சத்துடன் மாநில அரசு ரூ.50 ஆயிரத்தை சேர்த்து ரூ.2 லட்சமாக வழங்குகிறது. அதுமட்டுமின்றி வங்கிகள் மூலம் ரூ.2 லட்சம் கடனும் வழங்கப்படுகிறது.

மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சேகரித்து வைக்க குளிரூட்டும் நிலையம் அமைக் கவும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். இந்த பேரழிவு காலகட்டத்தில் வங்கிகளின் பங்களிப்பு மிகவும் முக்கிய மானது. எனவே வங்கிகள் தாராளமாக கடன் வழங்கிட வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுவை அரசு செயலாளர்கள் அன் பரசு, சுந்தரவடிவேலு, ரவி பிரகாஷ், சரண், மகேஷ், பூர்வா கார்க், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வீரராகவன் உள்பட வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com