நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை

நன்னடத்தை அடிப் படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை
Published on

பெங்களூரு,

நன்னடத்தை அடிப்படை யில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யும் நிகழ்ச்சி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு, கைதிகளை விடுதலை செய்து பேசியதாவது:-

சிவமொக்கா உள்பட சில நகரங்களில் புதிதாக சிறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நன்னடத்த அடிப்படையில் 1,334 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முடியவில்லை.

மாநிலத்தில் உள்ள சிறைகளில் மொத்தம் 14 ஆயிரத்து 500 கைதிகள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் திட்டமிட்டு தவறு செய்து சிறைக்கு வந்தவர்கள் இல்லை. திடீரெனவோ அல்லது அந்த நேரத்தில் கோபத்தில் செய்த தவறு காரணமாகவோ சிறைக்கு வந்தவர்கள் ஆவார்கள்.

அத்தகையவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து இந்த சமூகத்தில் மீண்டும் நல்லபடியாக வாழ மாநில அரசு அனுமதி கொடுக்கிறது. இனி குற்ற செயல்களில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் உழைத்து வாழ வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

முன்னதாக கோரமங்களா வில் உள்ள போலீஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து பரமேஸ்வர் பேசியதாவது:-

போலீசாரின் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டும் என்பது எங்களது விருப்பம். இத்தகைய பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட வேண்டும். போலீசாரின் குழந்தைகளுக்கு என்று உண்டு உறைவிட பள்ளிகளை திறக்க அரசு தேவையான உதவிகளை செய்யும். கல்வியால் நாட்டின் பொரு ளாதாரம் வளர்ந்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானி கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கல்வி ஒட்டு மொத்த வாழ்க்கையையே மாற்றுகிறது. இதனால் ஒவ்வொருவரும் உயர்கல் வியை பெற வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com