முல்லைப்பெரியாற்றில் குளிக்க தடை

முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
முல்லைப்பெரியாற்றில் குளிக்க தடை
Published on

தேனி:

கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் லோயர்கேம்ப் அருகே உள்ள முல்லைப்பெரியாறு, வைரவன் வாய்க்கால், குருவனற்று ஆற்றுப் பாலம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com