

விழுப்புரம்,
விளையாட்டுத்துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தயான்சந்த் விருது மற்றும் ராஷ்ட்ரிய கேல்புரோட்ஸ்ஹான் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.