மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன - மலைரெயில் ரத்து

பலத்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக மலைரெயில் ரத்து செய்யப் பட்டது.
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன - மலைரெயில் ரத்து
Published on

மேட்டுப்பாளையம்,

மலைகளின் அரசி,சுற்றுலா பயணிகளின்சொர்க்கபூமி என்றுவர்ணிக்கப்படும்நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்துமலைரெயில்இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் வெளிநாடு மற்றும்உள்நாட்டு சுற்றுலாபயணிகள்மகிழ்ச்சியுடன் பயணம் செய்துமலைப்பகுதியில்உள்ள இயற்கை எழில்காட்சிகளை கண்டுரசித்து வருகின்றனர்.பழமைவாய்ந்தமலைரெயிலைஉலகபாரம்பரியசின்னமாகயுனெஸ்கோநிறுவனம் அறிவித்து உள்ளது.

கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும்வடகிழக்கு பருவமழை காரணமாகமேட்டுப்பாளையம்- ஊட்டிமலைரெயில்பாதையில்மண்சரிவுஏற்பட்டு ரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் மண் சரிந்துரெயில்பாதையைமூடியது. மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டிமலைரெயில்போக்குவரத்து அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் குன்னூர்,கல்லாறுமற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டிமலைரெயில்பாதையில் அடர்லி-ஹில்குரோவ்ரெயில் நிலையங்கள் இடையேமண்சரிவுஏற்பட்டு தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் மண் சரிந்துரெயில் பாதையை மூடியது.

காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்துஊட்டிக்கு புறப்பட்டமலைரெயில்காலை 8.15 மணிக்கு அடர்லி ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் அந்த ரெயில் குன்னூர்நோக்கி சென்றது. ஆனால் மண்சரிவு காரணமாகமலைரெயில்நடுவழியில் நின்றது. இதனால் குன்னூர் மற்றும்ஊட்டிக்கு செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள்அவதி அடைந்தனர்.

வனவிலங்குகள்நடமாட்டம் மிகுந்த மலைப்பகுதியில்ரெயில்நிறுத்தப்பட்டதால்சுற்றுலா பயணிகள்பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.இதனை தொடர்ந்துஅடர்லிரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.45மணிக்கு புறப்பட்டமலைரெயில்காலை 9.15 மணிக்கு மீண்டும்கல்லாறுரெயில்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையஅதிகாரி கிருஷ்ணமூர்த்தி சுற்றுலா பயணிகளுக்கு தேவையானபஸ் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

கல்லாறில்இருந்து 3 பஸ்களில் சுற்றுலா பயணிகள்குன்னூர் மற்றும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.மண் சரிவுகுறித்து சேலம்ரெயில்வேகோட்ட உயர்அதிகாரிகளுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர்மலைரெயில்இருப்புப்பாதை பொறியாளர்ஜெயராஜ்தலைமையில் மேட்டுப்பாளையம், குன்னூர்ரெயில்வேதொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர்ரெயில்பாதையில்விழுந்து கிடந்த சிறிய மற்றும் பெரியபாறைகளை கயிறுகட்டி இழுத்துஅகற்றி பள்ளத்தில்தள்ளினார்கள்.ரெயில்பாதையைமூடிக்கிடந்த மண்ணை அகற்றினர். பாறைகள் விழுந்ததால் சேதமடைந்த தண்டவாளம்,பினியன்ராடுஆகியவற்றை அகற்றிவிட்டுஅதற்கு பதிலாக புதியதண்டவாளம் மற்றும்பினியன்ராடுகளைபொருத்தினர்.ரெயில்பாதையைசீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர்தான் மேட்டுப்பாளையம்- ஊட்டிமலைரெயில்போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.மண்சரிவுகாரணமாகமலைரெயில்போக்குவரத்து நேற்று ஒருநாள் மட்டும் ரத்துசெய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com