

புதுச்சேரி,
புதுவையில் கேபிள் டி.வி. நடத்தி சிலர் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் நேற்று இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், மாவட்ட தலைவர்கள் நாகேஸ்வரன், அசோக்பாபு, ஆனந்தன், தெய்வசிகாமணி, தொகுதி தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.