நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவின்ஜ் பிறந்தநாள் விழா

கொடைக்கானலில் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவின்ஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவின்ஜ் பிறந்தநாள் விழா
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 24 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. புகழ்பெற்ற இந்த ஏரி கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்று வருகின்றனர். மேலும் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் கொடைக்கானல் சுற்றுவட்டார கிராம பகுதிகளான பேத்துப்பாறை, அஞ்சுவீடு உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு விவசாயத்திற்கும், பழனி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 1864-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சர் ஹென்றி லெவின்ஜ் என்பவர் நட்சத்திர ஏரியை செயற்கையாக உருவாக்கினார்.

அவரது நினைவாக நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. சர் ஹென்றி லெவின்ஜ் 202-வது ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொடைக்கானலில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த நினைவு தூணுக்கு மலர் தூவி சமூக ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர். அவருடைய பிறந்த நாளை நட்சத்திர ஏரி தின விழாவாக அறிவித்து, அரசு விழாவாக கொண்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com