துறைமுகம் தொகுதியில் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் ஆய்வு

துறைமுகம் தொகுதியில் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் ஆய்வு.
துறைமுகம் தொகுதியில் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் ஆய்வு
Published on

சென்னை,

துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60-வது வார்டு அங்கப்பநாயக்கன் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும், 57-வது வார்டு யானைகவுனி மேம்பாலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும், நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூர்வாரும் பணிகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி மற்றும் அலுவலர்கள், பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர் உள்பட பலரும் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com