4 மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

4 மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி குமரியில் போராட்டம் நடத்தப்பட்டது.
4 மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
Published on

கன்னியாகுமரி,

இலங்கை கடற்படைக்கு கண்டனம்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஈவு, இரக்கமின்றி கொன்றதாக ராமேசுவரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டமும் நடந்தது. அரசியல் கட்சியினரும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கடும் கண்டன குரல் எழுப்பினர்.

மீனவர்கள் போராட்டம்

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கொல்லப்பட்ட 4 தமிழக மீனவர்களின் இறப்புக்கு நீதி கேட்டும், இலங்கை கடற்படையை கண்டித்தும் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் தூய இன்னாசியார் ஆலயம் முன்பு மீனவர்கள் கருப்புக்கொடிஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவளம் கிளை தலைவர் தனேஷ் தலைமை தாங்கினார்.

மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர், அகஸ்தீஸ்வரம் வட்டார குழு தலைவர் ஜேம்ஸ், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com