பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

தஞ்சையில் உள்ள பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Published on

தஞ்சாவூர்

தஞ்சை மேம்பாலம் மருத்துவகல்லூரி சாலையில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முன்பருவப்பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை இருபாலர்களுக்கும் உண்டு, உறைவிடப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் அரசு வழங்கும் அனைத்து கற்றல் உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு சிறப்பாசிரியர்களை கொண்டு சீரியமுறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த பள்ளிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியை, பார்வைத்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். செவித்திறன் மற்றும் வாய்பேச முடியாத மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர் என்ற முகவரியிலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362-236791 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com