உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
Published on

உதவி வரவேற்பாளர்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் (100 சதவீதம் பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு, ஆதரவற்ற விதவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 18 வயது முதல் 42 வயதுக்குள் 100 சதவீதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயர் நாற்காலி பின்னும் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உரிய சான்றிதழ்களுடன்

மேலும், இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகள், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com