

சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வா.சந்திராபுரம் மற்றும் சின்ன வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் சக்தி உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கம்மாளப்பட்டி ஊராட்சியில் உள்ள வரப்பாளையம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 30 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப் பட்டது.
டாக்டர் பவித்ரா தலைமையிலான குழுவினர் ரத்தமாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வை யாளர் முருகதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.